மேலும் செய்திகள்
குன்றத்து கோயிலில் நாளை பட்டாபிஷேகம்
22-Nov-2026
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் இன்று (நவ.,24) காலை நடந்தது. நவ. 16ல் கொடியேற்றத்துடன் துவங்கிய கார்த்திகை தீபத்திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். இன்று காலை 8:00 மணிக்கு 16 கால் மண்டபம் அருகே சிறிய வைரத் தேரில் எழுந்தருள ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. கடந்த ஆண்டுகளில் கோயில் வாசலிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரையிலும், கிழக்குப் பகுதியில் அவனியாபுரம் பிரிவு ரோடு வரையிலும் 2 கி.மீ., துாரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்று 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு தீபத்துாண் பிரச்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. கிராமப் பகுதிகளில் இருந்து அதிகளவில் மக்கள் வந்தனர். பெரும்பாலானோர் பவுர்ணமி கிரிவலம் மட்டும் சென்றனர்.
22-Nov-2026