மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர்களும் போராட முடிவு
11-Dec-2024
மதுரை: 'கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று நடக்க இருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இச்சங்கத்தின் மாநில தலைவர் வைரவன், பொதுச் செயலாளர் விஜயகுமார் கூறியிருப்பதாவது: எங்கள் சங்க மாநில செயற்குழு முடிவின்படி நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (டிச.20) சென்னை இயக்குனர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடத்த திட்டமிட்டோம். போலீசார் முயற்சியால், நெடுஞ்சாலைத் துறை முறையான பேச்சு வார்த்தைக்கு அழைக்க உள்ளனர்.மக்கள் நலத்திட்ட உதவி வழங்க கோவை வந்த முதல்வரை சந்தித்து 41 மாத பணிநீக்க காலத்தை கருத்தியலான ஊதியம், ஓய்வூதிய பலன்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனு வழங்கப்பட்டது.இதனை நிறைவேற்றி தருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்று நல்லெண்ண அடிப்படையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
11-Dec-2024