உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழிநெடுக பள்ளம் தடுமாறும் வாகனங்கள்

வழிநெடுக பள்ளம் தடுமாறும் வாகனங்கள்

சோழவந்தான், : பள்ளபட்டி- சோழவந்தான் சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் கரட்டுப்பட்டி பகுதி பெரியாறு பாசன கால்வாய் முதல் கருப்பட்டி பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே கிளை கால்வாய் வழியாக மதுரை மாநகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது.இதற்காக சாலையின் இடது புறமாக தோண்டிய 'மெகா சைஸ்' பள்ளங்கள் மூடப்பட்டு சமீபத்தில் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை அமைத்த சில வாரங்களிலேயே அடுத்தடுத்து பல இடங்களில் 4 கி.மீ., சாலையில் தார் உரிந்து சேதமடைகின்றன. சில இடங்களில் 1.5 அடி ஆழ குழிகள் விழுந்துள்ளன.சில இடங்களில் பனைஓலைகளை பள்ளத்தில் வைத்து வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மிதமான சாலையை சுரண்டி ஜல்லி பரப்பப்பட்டுள்ளது. ஒருவழிப்பாதை போல் உள்ள இச்சாலையில் இடது புறத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை