ரூ.2 லட்சம் பறிமுதல்
மதுரை: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து நேற்று இரவு 7:00 மணிக்கு மதுரை கிழக்கு ஒன்றியம் ராஜாக்கூரில் சிவகாமி சுந்தரி, பாண்டீஸ்வரி உள்ளிட்ட நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அவ்வழியே வாகனத்தில் வந்த நரேஷ்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.