| ADDED : ஜன 12, 2024 12:23 AM
கொட்டாம்பட்டி:மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், கடந்த, 2016 - 2018 வரை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவர்கள் தர்மராஜ், பாலச்சந்தர். ஆழ்துளை கிணறு அமைப்பது, மோட்டார் மற்றும் குழாய் பொருத்துவது போன்ற பணிகள் நடந்தன. இப்பணியில், 17 ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டனர். அதிகாரிகள் இடம் மாறிச் சென்ற நிலையில், 2016 - 18ல் முறைகேடு நடந்ததாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.போலீசார் விசாரித்ததில், சில இடங்களில் மோட்டார், குழாய் அமைக்கப்படாமல், போலி பில் கொடுத்து, 19.46 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக அப்போதைய பி.டி.ஓ.,க்கள் தர்மராஜ், பாலசந்தர், உதவி செயற்பொறியாளர்கள் அறிவழகன் உட்பட, 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.தற்போது, தர்மராஜ், பாலசந்தர் ஆகியோர் கள்ளிக்குடி, மேலுார் பி.டி.ஓ.,க்களாக உள்ளனர். அவர்களது வீடுகள், உதவி செயற்பொறியாளர்கள் வீடுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.