உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாத்தையாறு அணை 14 அடி உயர்வு

சாத்தையாறு அணை 14 அடி உயர்வு

பாலமேடு, : பாலமேடு சாத்தையாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணை நீர்மட்டம் 10 அடியிலிருந்து 24 அடியாக உயர்ந்துள்ளது.இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான திண்டுக்கல் சிறுமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த அக்.,26ல் அணை மறுகால் பாய்ந்தது.இதை தொடர்ந்து பாசன வசதி பெறும் 11 கண்மாய்களுக்கு 28ல் அணை திறக்கப்பட்டது. கண்மாயகள் நிரப்பப்பட்ட நிலையில் அணையின் மொத்த கொள்ளளவு நீர்மட்டம் 29 அடியில் இருந்து 10 அடியாக குறைந்தது.சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் 24 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 80 முதல் 100 கன அடி வரை வருகிறது. நீர் வரத்து ஓடைகளில் அவ்வப்போது காட்டாற்று வெள்ளம் பாய்ந்து வருவதால் அணை மீண்டும் நிறைந்து மறுகால் பாய வாய்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !