241 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
திருப்பரங்குன்றம்; மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் படிக்கும் 241 மாணவர்களுக்கு ரூ. 96.61 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. கல்லுாரி நிறுவனர் தின விழா தாளாளர் ஹரி தியாகராஜன் தலைமையில் நடந்தது. முதல்வர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், இஸ்ரோ ஓய்வுபெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன், மிஷன் டெவலப்மென்ட் ஹெலோஜன் துணைத் தலைவர் அஜய்குமார் பேசினர். 241 மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சாரிடபிள் டிரஸ்ட் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகையாக ரூ. 96 லட்சத்து 61 ஆயிரத்து 118 வழங்கப்பட்டது. கல்லுாரியில் 1996--2000ம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ. 50 லட்சத்து இரண்டாயிரம் அறக்கட்டளை நிதிக்கு வழங்கப்பட்டது. பதிவாளர் ராஜாராம் நன்றி கூறினார்.