பள்ளி, கல்லுாரி செய்திகள்
இலவச நோட்டுகள் வழங்கல்
திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் தனக்கன்குளம் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. மன்றத்தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கீதா, ஜெயின்ஸ் குரூப் இன்டர்நேஷனல் திருநகர் தலைவர் மரகதசுந்தரம் நோட்டுகள் வழங்கினர். நிர்வாகிகள் அண்ணாமலை, காளிதாசன், வேட்டையார், பாஸ்கர்பாண்டி, அரவிந்தன் கலந்து கொண்டனர். 150 மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் 'கொஞ்சம் நெஞ்சம் நெகிழுங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. தாளாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறை தலைவர் உமா மகேஸ்வரி அறிமுக உரையாற்றினார். மாணவி அங்காள ஈஸ்வரி வரவேற்றார். பேராசிரியர் சித்ரா பேசினார். மாணவி பிரியதர்ஷினி தொகுத்து வழங்கினார். மாணவி அஸ்வினி நன்றி கூறினார். புத்தக பை வழங்கல்
திருப்பரங்குன்றம்: ஜோதி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு தொழிலதிபர் ரஞ்சித்குமார் புத்தக பை வழங்கினார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.