உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

வகுப்பு துவக்க விழாமேலுார்:கிடாரிப்பட்டி லதா மாதவன் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. முதல்வர் முருகன் வரவேற்றார். செயல் அலுவலர் முத்துமணி தலைமை வகித்தார். டி.வி.எஸ்., சென்சிங் சொல்யூஷன் நிறுவன மனிதவளத்துறை மேலாளர் பொன்னியின் செல்வன், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பயன்கள் குறித்து பேசினார். முதல்வர்கள் சரவணன், தவமணி, பழனி செல்வம், வேலைவாய்ப்பு அலுவலர் அனீஸ் பாத்திமா, செயல் அலுவலர்கள் பிரபாகரன், மீனாட்சிசுந்தரம், காந்திநாதன் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் மீனாட்சிசுந்தரம், சுதா ஒருங்கிணைத்தனர். துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.புத்தாக்க பயிற்சிதிருப்பரங்குன்றம்:மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. தலைவர் குமரேஷ் தலைமை வகித்தார். பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். டீன் கவிதா, வேலைவாய்ப்பு அலுவலர் ஜெயந்தி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் துரைசாமி, துறைத் தலைவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். உன்னதி சேஞ்ச் மேக்கர் ஸ்ரீலதா பேசினார். பேராசிரியர் கலைவாணி தொகுத்து வழங்கினார். பேராசிரியர் விஷ்ணுபிரியா நன்றி கூறினார்.வகுப்பறை திறப்பு விழாமதுரை: மருத்துவக்கல்லுாரியின் மருந்தியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நவீன வகுப்பறை திறப்பு நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ்குமார் திறந்து வைத்தார். மருந்தியல் கல்லுாரியில் பணி ஓய்வு பெற்ற இணைப்பேராசிரியர் உமாராணிக்கு பணி ஓய்வு பாராட்டுவிழா நடந்தது. துணை முதல்வர் மல்லிகா, மருந்தியல் கல்லுாரி முதல்வர் வெங்கட்ட ரத்தினகுமார், முன்னாள் மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் பொன்ராஜன், குணசேகரன், சீனிப்பாண்டியன் கலந்து கொண்டனர்.இலவச நோட்டுகள் வழங்கல்திருப்பரங்குன்றம்:ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ். ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் நிலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். தமிழாசிரியர் மகாலட்சுமி வரவேற்றார். திருநகர் மக்கள் மன்ற துணைத் தலைவர் பொன் மனோகரன், தொழிலதிபர் சர்வேஸ்வரன் வழங்கினர். திருநகர் ஜெயின்ஸ் குரூப் தலைவர் மரகதசுந்தரம், சமூக ஆர்வலர் நாகராஜன், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி பிச்சுமணி, ஆசிரியர் அய்யர் பேசினர். மன்ற நிர்வாகிகள் அண்ணாமலை, வேட்டையார், காளிதாசன், பாஸ்கர் பாண்டி, அரவிந்தன், ஜெயின்ஸ் குரூப் நிர்வாகி குருசாமி கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் மெரிலா ஜெயந்தி அமுதா நன்றி கூறினார்.கருத்தரங்குமதுரை:உலகத் தமிழ்ச் சங்கத்தில் மேலுார் அரசு கல்லுாரி சார்பில் நடந்த தமிழ்க்கூடல் நிகழ்வில் ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். இயக்குநர் (பொறுப்பு) அவ்வை அருள் தலைமை வகித்தார். காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் 'கருணாநிதியின் படைப்புக்களில் காந்தியச் சிந்தனைகள்' எனும் தலைப்பில் பேசினார். மாணவர்கள், சங்க உறுப்பினர்கள் கொண்டனர்.துவக்க விழா திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தமிழ் உயராய்வு மையம் சார்பில் தமிழ் பேரவை துவக்க விழா நடந்தது. முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், உப தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை தலைவர் காயத்ரிதேவி வரவேற்றார். பேராசிரியர் தேவிபூமா அறிமுக உரையாற்றினார். சிவகாசி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பொன்னி பேசினார். பேராசிரியர் முனியசாமி தொகுத்து வழங்கினார். பேராசிரியர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.பள்ளி கட்டடம் திறப்புசோழவந்தான்:கொடிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேற்கு தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் புதிய வகுப்பறை கட்டடத்தை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ திறந்து வைத்தார். ரூ. 22.50 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறைகளை கட்டப்பட்டுள்ளன. தலைமை ஆசிரியை நித்தியக்கனி தலைமை வகித்தார். ஏற்பாடுகளை கிளைச் செயலாளர் கருப்பணன், இளைஞரணி நிர்வாகி வெற்றிவேல் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை