மேலும் செய்திகள்
90 வயது மூதாட்டி கண்கள் தானம்
02-Nov-2024
உறுதிமொழி ஏற்புபெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா சாந்தி பேசினார். மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் விஜயகுமார், ராமகிருஷ்ணன், இருளப்பன் ஏற்பாடுகள் செய்தனர்.பரிசளிப்பு விழாஉசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதி அரசு பள்ளிகளில், தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம், உசிலம்பட்டி வளர்ச்சி மையம், உசிலை நகர லயன்ஸ் சங்கம் இணைந்து, பேச்சு, கட்டுரை, பொதுஅறிவு உள்ளிட்ட 7 பிரிவுகளில் பல்திறன் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தொழில் முனைவு மேம்பாட்டு மைய செயலாளர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுடலைமுத்து, மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பதிவாளர் ராஜ்யகொடி, முன்னாள் லயன்ஸ் கவர்னர் அறிவழகன், புலவர் சின்னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர்.
02-Nov-2024