உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு காரீப் பருவ பயிற்சி

விவசாயிகளுக்கு காரீப் பருவ பயிற்சி

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வேளாண் விரிவாக்க மையம், வேளாண்மை தொழில்நுட்பம் மேலாண்மை முகமை (ஆத்மா) சார்பில் நிலையூர் பிட் 2 கிராமம், இந்தாண்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இங்கு வேளாண் முன்னேற்ற குழு உறுப்பினர்களுக்கு காரீப் பருவ பயிற்சி நடந்தது. உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம், முதலமைச்சரின் மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், மானிய திட்டம் குறித்தும், வேளாண் அலுவலர் அருள் நவமணி விஜய பாரதி, நெல் சாகுபடி முறைகள், திரவ உயிர் உரங்கள், நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடுகள், உபயோகிக்கும் முறை குறித்தும், உதவி வேளாண் அலுவலர் சங்கர் கணேஷ், நெல் கொள்முதல், விற்பனை குறித்தும், உதவி வேளாண் அலுவலர் டேவிட், இடுபொருட்கள் குறித்தும் விளக்கி பேசினர். திட்ட அலுவலர்கள் லதா, மகாலட்சுமி, அழகர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை