உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சலுகை விலையில் விதை, உரங்கள்

சலுகை விலையில் விதை, உரங்கள்

டி.கல்லுப்பட்டி: வேளாண்மை உதவி இயக்குனர் விமலா கூறியதாவது: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல் விளக்கம் அமைக்க ஒரு ஏக்கருக்கு மக்காச்சோள விதை 10 கிலோ, உயிர் உரம் ஒரு லிட்டர், நானோ யூரியா அரை லிட்டர், உயிர்ம உரம் 12 கிலோ அடங்கிய தொகுப்பு ரூ.6 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது. நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. குதிரை வாலி, கம்பு, சோளம், வரகு போன்ற சிறு தானிய பயிர்கள் செயல் விளக்கம் அமைக்க ஏக்கருக்கு ரூ. 6 ஆயிரம் மானியத்தில் விதை, உயிர் உரம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், நுண்ணுாட்டக் கலவை, உயிர்ம உரம், சிறுதானிய விதைகள் தொகுப்பு வழங்கப்படுகிறது. துவரை, உளுந்து செயல் விளக்கம் அமைக்க ரூ. 9 ஆயிரம் மானியத்தில் விதை, உயிர் உரம், நுண்ணுாட்டக் கலவை, உயிரியல் கட்டுப்பாட்டு காரணி, தார்ப்பாலின் அடங்கிய தொகுப்பு தயாராக உள்ளது. விவசாயிகள் புகைப்படம், ஆதார் அட்டை நகல், கணினி சிட்டாவுடன் வேளாண்மை அலுவலகத்தை அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !