மேலும் செய்திகள்
பவ்டா கல்லுாரியில் கணினி தமிழ் கருத்தரங்கம்
30-Sep-2025
மதுரை: மதுரை யாதவர் கல்லுாரி பொருளாதாரத்துறை சார்பில் 'தமிழ் இலக்கியத்தில் பொருளாதாரம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் செ.ராஜூ தலைமை வகித்தார். துறைத்தலைவர் கருப்பணழகு வரவேற்றார். கே.பி.எஸ்.கண்ணன், கல்லுாரித் தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், துணை முதல்வர் கிருஷ்ணவேணி, சுயநிதிப்பிரிவு இயக்குனர் ராஜகோபால் பேசினர். சிறப்பு விருந்தினர் சித்ராகணபதி தமிழ் இலக்கிய பொருளாதாரம் குறித்து பேசினார். பேராசிரியர்கள் பொற்கொடி, ஜெயராணி, கணேஷ்பாபு ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர் ஜெயமுனீஸ்வரன் நன்றி கூறினார்.
30-Sep-2025