பயிர் காப்பீடு செய்ய செப்.30 கடைசிநாள்
திருப்பரங்குன்ற : திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்கம் மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாசிப்பயறு பயிரிட்டுள்ள விவசாயிகள் செப். 30க்குள் பயிர் காப்பீடு செய்யலாம் என வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் 150 முதல் 170 எக்டேர் பாசிப்பயறு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வலையங்குளம் பிர்காவில் பெருமளவு பாசிப்பயறு பயிரிடப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பை தவிர்க்கவும், நஷ்டத்தை தவிர்க்கவும் பயிர் காப்பீடு செய்வது அவசியம்.பாசிப்பயறு பயிரிட்டுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், வங்கி பாஸ்புக் நகல், ஆதார் நகலுடன் அருகிலுள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றார்.