குறுவட்ட கோ கோ போட்டி
மதுரை: ஆரப்பாளையம் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கோகோ போட்டி செவன்த் டே பள்ளியில் நடந்தது. ஆடவர் பிரிவில் மதுரைக் கல்லுாரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பிரிவுகளிலும் முதலிடம் பெற்றனர். 14 வயதிற்குட்பட்டோர் பிரிவு இறுதிப்போட்டியில் செவன்த் டே பள்ளியை 6- - 4 புள்ளிகளிலும் 17 வயது போட்டியில் ஸ்ரீவித்யாலயம் பள்ளியை 14 -- 4 புள்ளிகளிலும் 19 வயது பிரிவில் ஸ்ரீ வித்யாலயம் பள்ளியை 10 -- 4 புள்ளிகளில் மதுரைக் கல்லுாரி பள்ளி அணி வீழ்த்தியது. மூன்று பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து 13வது ஆண்டாக மண்டல போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். மாணவர்களை பள்ளிச் செயலாளர் பார்த்தசாரதி, தலைமையாசிரியர் பாலாஜிராம், உடற்கல்வி ஆசிரியர்கள் இளங்குமரன், ஈஸ்வரன், ராஜா பாராட்டினர்.