உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஸ்கல் பேஸ் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை; மதுரை அப்போலோ மருத்துவமனையில் சாதனை

ஸ்கல் பேஸ் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை; மதுரை அப்போலோ மருத்துவமனையில் சாதனை

மதுரை : மதுரை அப்போலோ மருத்துவமனையில் 'ஸ்கல் பேஸ் எண்டோஸ்கோபிக்' முறையில் இரண்டு பெண் நோயாளிகளுக்கு சிக்கலான மூளை சார்ந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.காது மூக்கு தொண்டை நிபுணர் மீனா பிரியதர்ஷினி, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஷியாம் கூறியதாவது:எங்களது டாக்டர்கள் கெவின் ஜோசப், பிரேம்நாத், நிஷா, சங்கர், மணிகண்டன் உதவியுடன் இரண்டு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. 51 வயது நபர் தலைக்காய விபத்து, எலும்பு முறிவுகளுடன் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தண்டுவட திரவ கசிவு எனும் பிரச்னை இருந்ததால் மூளைத் தண்டுவட திரவ கசிவுக்கான 'டிரான்ஸ்கிரானியல்' மற்றும் 'டிரான்ஸ் நேசல் எண்டோஸ்கோபிக் ஸ்கல் பேஸ்' எனப்படும் புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தினோம்.ஒரே நேரத்தில் மண்டை ஓட்டு அடிப்பகுதியின் 4 இடங்களிலும் 'டிரான்ஸ் கிரானியலின்' ஒரு இடத்திலும் என மூளைத் தண்டுவட திரவ கசிவுக்கான 5 இடங்களை மூளை அறுவை சிகிச்சை இல்லாமல் 'ஸ்கல் பேஸ் எண்டோஸ்கோபிக்' மூலம் சரிசெய்தது சிக்கலான, சாதனையான விஷயம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி குணமடைந்து வீடு திரும்பினார்.மற்றொரு 50 வயது நோயாளிக்கு பிட்யூட்டரி சுரப்பியில் அரிய வளர்ச்சி ஹார்மோன் சுரக்கும் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மோசமான நீரிழிவு பாதிப்பும் ஏற்பட்டது. மருத்துவ குழுவினர் 'ஸ்கல் பேஸ் எண்டோஸ்கோபிக்' மூலம் 'சைபர் நைப் ரேடியோ' அறுவை சிகிச்சையை செய்தனர். மேலும் இன்சுலின் சுரப்பால் 9 மாதங்களில் நீரிழிவு பிரச்னையில் இருந்து நோயாளி இயல்பு நிலைக்கு திரும்பினார் என்றனர்.சி.ஓ.ஓ. நீலகண்ணன் கூறுகையில்,'' மதுரை அப்போலோ மருத்துவமனை அதிநவீன மருத்துவ முன்னேற்றங்களுக்கு முன்னோடியாகவும், 'ஸ்கல் பேஸ் எண்டோஸ்கோபிக்' அறுவை சிகிச்சைகளுக்கான முதன்மையான நிறுவனமாக உள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை