உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வினாடி வினா போட்டிகளில் எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் சாதனை

வினாடி வினா போட்டிகளில் எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் சாதனை

மதுரை: கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.) மாணவர்களுக்கான பாராட்டு விழா தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.இப்போட்டிகளில் மாநில அளவில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.முதல் சுற்று ஆன்லைனில் நடந்தது. இரண்டாவது சுற்று மாவட்ட அளவிலும் மதுரை, திண்டுக்கல், தேனி, மாவட்டங்களில் நடந்தது. மதுரையில் நடந்த போட்டியில் எஸ்.எல்.சி.எஸ்., கணித அறிவியல் துறை முதலாமாண்டு மாணவர்கள் எஸ். ஷேக் அமீன், இ. நித்தின் தங்கவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த அரையிறுதி போட்டிகளில் இருவரும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர்.இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று ரூ.6 லட்சம் பரிசு வென்றனர். இப்பரிசை முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.பரிசு பெற்ற மாணவர்களை கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, நிர்வாக மேலாண்மையர் ஆர்.ராம்குமார், முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குரு பாஸ்கர், டீன் பிரியா, கணினி அறிவியல் துறை தலைவர் அனுராதா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !