உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மண் பரிசோதனை முகாம்

 மண் பரிசோதனை முகாம்

மதுரை:ஜூன் 15 வரையான மண் பரிசோதனை முகாமில், மதுரை மாவட்ட விவசாயிகள் பயிருக்கேற்ற உரத்தை இடுவதற்காக மண் பரிசோதனை செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்தார். அவர் கூறுகையில், ''மதுரையில் உள்ள 420 கிராம விவசாயிகளுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மண்ணை பரிசோதனை செய்து மண்வள அட்டையில் தெரிவித்தவாறே பயிருக்கான உரங்களை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் பயிர்களுக்கான சரியான மகசூல் கிடைக்கும்; மண்வளமும் பாதுகாக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !