தினமலர் செய்தியால் தீர்வு
மேலுார்: அட்டப்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடத்தில் 15 நாட்களாக விவசாயிகள் நெல்லை குவித்து வைத்தனர். கொள்முதல் செய்யாததால் நெல் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகியது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரன் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.