மேலும் செய்திகள்
நெல் அறுவடை செய்யும் பணி துவக்கம்
24-Oct-2024
மதுரை: மதுரை மாவட்டத்தில் குறுவை சாகுபடி நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது சம்பா (ராபி பருவம்) நெல் விதைப்பு மற்றும் நடவுப் பணிகள் நடக்கிறது.மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லுார், வாடிப்பட்டி, செல்லம்பட்டியில் 4500 எக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 15 நாட்கள் முதல் ஒரு மாத இடைவெளியில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் எந்த பகுதியில் முதல் அறுவடை துவங்குகிறதோ அங்கு விவசாயிகளின் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சம்பா சீசனில் மாவட்டம் முழுவதும் 32 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடியாகும். தற்போது வரை 1100 எக்டேரில் நடவுப்பணிகள் முடிந்துள்ளன. அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் 126 டன் நெல் விதை இருப்பு உள்ளது. 48 டன் சிறுதானியம், 9 டன் பயறு, நிலக்கடலை, எள் 14 டன், பருத்தி 3.3 டன் விதை இருப்பில் உள்ளது என்கிறார் வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ். அவர் கூறியதாவது: மத்திய, மாநில அரசின் திட்டங்களின் கீழ் 50 சதவீத மானியத்தில் விதை வழங்கப்படும். உரங்களைப் பொறுத்தவரை யூரியா 4687 டன், டி.ஏ.பி., 775, எம்.ஓ.பி., 782, என்.பி.கே.எஸ்., 3120, எஸ்.எஸ்.பி., 557 டன் அளவு இருப்பு உள்ளது. நிர்ணயித்த விலையை தாண்டி கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
24-Oct-2024