எஸ்.பி.பி. பிறந்த தின விழா
மதுரை; இசை மேதை மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியன் 80வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் தலைவர் நெல்லை பாலு, கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் முனைவர் ஜெகதீசன், செயலாளர் ஶ்ரீ தர். சத்தியம் செந்தில் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். எஸ்பிபி பாடிய பாடலை பாடகர் ஜோசப் பாடினார்.