எல்.ஐ.சி., பெண் முகவர்களுக்கும் சிறப்பு சலுகை: மாநாட்டில் வலியுறுத்தல்
மதுரை: மதுரையில் கோட்ட அளவிலான எல்.ஐ.சி., முகவர்கள் சங்க மகளிர் மாநாடு நடந்தது. தலைவர் மரியலுாயிஸ் தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி, சைபர் கிரைம் எஸ்.ஐ., மாணிக்கவாசகி முன்னிலை வகித்தனர். மரியலுாயிஸ் பேசியதாவது: அரசு பணிகளில் உள்ள மகளிருக்கு பேறுகால விடுமுறைகள் அளிப்பது போல் பெண் எல்.ஐ.சி. முகவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். பெண் முகவர்களுக்கு குழு காப்பீடு திட்டம் வழங்க வேண்டும். அகில இந்திய அளவில் முகவர்கள் குடும்பத்திற்கு குடும்ப நலநிதி உருவாக்க வேண்டும். மேலும் பெண் முகவர்கள் சிறப்பாக வணிகம் செய்து வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக எல்.ஐ.சி. அவர்களுக்கு முன்னுரிமை மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்றார். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு, குரூப் இன்சூரன்ஸ் நடைமுறைப்படுத்துதல், எல்.ஐ.சி., பாலிசிகளுக்கான போனஸ் தொகை உயர்த்துதல், பாலிசி கடனுக்கான வட்டி விகிதம் குறைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, எல்.ஐ.சி., மகளிர் ஒருங்கிணைப் பாளர் பாக்கியலட்சுமி, மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சித்ரா, வழக்கறிஞர் ஆனந்தவள்ளி, பெண் தொழில் முனைவோர் அமைப்பு தலைவி ராஜகுமாரி ஜீவகன் பங்கேற்றனர். சங்க பொருளாளர் சிவ சுப்பிரமணியன் நன்றி கூறினார்.