சிறப்பு பள்ளி கட்டடம் திறப்பு
திருமங்கலம்: சக்ஸம் இந்தியா, தமிழ்நாடு அமைப்பு சார்பில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு தோப்பூர் சிவானந்த சேவாஸ்ரமம் சுவாமி ஸ்வரூபானந்தா வளாகத்தில் 'தீமஹி ஸ்பெஷல் ஸ்கூல்' என்ற பெயரில் சிறப்பு பள்ளி இயங்குகிறது. இதன் புதிய கட்டடங்களை அக்ரி கல்ச்சர் இன்சூரன்ஸ் நிறுவன தலைவர் லாவண்யா ஆர்.முந்தயூர் திறந்து வைத்தார். நிறுவனத்தின் செயல் இயக்குனர் சஞ்சய் லல்லா, துணைப் பொது மேலாளர் நாகராஜன், சாரதா சமிதி நிர்வாகி கதாதரப்பிரியா கலந்து கொண்டனர். பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இங்கு கல்வி மட்டுமல்லாது, வாழ்க்கையின் அடிப்படை பயிற்சிகள், தொழிற் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை சக்ஸம் அமைப்பின் நிர்வாகி காமாட்சி சாமிநாதன், பள்ளி முதல்வர் கீதா செய்திருந்தனர்.