உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மைசூருவில் இருந்து சிறப்பு ரயில்கள்

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மைசூருவில் இருந்து சிறப்பு ரயில்கள்

மதுரை: தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து திருநெல்வேலி, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூரு - திருநெல்வேலி செப்., 15 முதல் நவ., 24 வரை திங்கள் தோறும் இரவு 8:15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06239), மறுநாள் காலை 11:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. மறுமார்க்கத்தில், செப்., 16 முதல் நவ., 25 வரை செவ்வாய் தோறும் மதியம் 3:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06240), மறுநாள் அதிகாலை 5:40 மணிக்கு மைசூரு செல்கிறது. இரு ரயில்களும் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கன்டோன்மென்ட், கே.எஸ்.ஆர்., பெங்களூரு வழியாக செல்கின்றன. ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 10 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. மைசூரு - ராமநாதபுரம் செப்., 15 முதல் அக்., 27 வரை திங்கள் தோறும் மாலை 6:35 மணிக்கு மைசூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06237), மறுநாள் காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் செல்கிறது. மறுமார்க்கத்தில், செப்., 16 முதல் அக்., 28 வரை செவ்வாய் தோறும் மதியம் 3:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06238), மறுநாள் காலை 7:45 மணிக்கு மைசூரு செல்கிறது. இரு ரயில்களும் பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர், பெங்களூரு கன்டோன்மென்ட், கே.எஸ்.ஆர்., பெங்களூரு வழியாக செல்கின்றன. 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 5 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 8 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படுகின்றன. மைசூரு - காரைக்குடி செப்.,18 முதல் நவ., 29 வரை வியாழன், சனி தோறும் இரவு 9:20 மணிக்கு மைசூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06243), மறுநாள் காலை 11:00 மணிக்கு காரைக்குடி செல்கிறது. மறுமார்க்கத்தில், செப்., 19 முதல் நவ., 30 வரை வெள்ளி, ஞாயிறு தோறும் மாலை 6:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06244), மறுநாள் காலை 7:45 மணிக்கு மைசூரு செல்கிறது. இரு ரயில்களும் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கன்டோன்மென்ட், கே.எஸ்.ஆர்., பெங்களூரு வழியாக செல்கிறது. ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 10 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி