உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனநல மேம்பாடு சிறப்பு பயிற்சி

மனநல மேம்பாடு சிறப்பு பயிற்சி

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் உள்தர உறுதிப்பாட்டு மையம் (ஐ.கியூ.ஏ.சி.,) சார்பில் 'அக அமைதியை ஆற்றலாக்குவோம்' என்ற தலைப்பில் பணியாளர்களின் மனநல உணர்வு நலன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. மையம் ஒருங்கிணைப்பாளர் கலா தலைமை வகித்தார். ஆலோசகர் சவுரிபுஷ்பா, ஆலோசனை, சிந்தனையை துாண்டும் கலந்துரையாடல் மூலம் அக அமைதி, உணர்வு சமநிலை, தன்னலப் பேணுதலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மைய உதவி ஒருங்கிணைப்பாளர் ஆன்சிமா ஜோசப் வரவேற்றார். பணியாளர் சூர்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !