உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளையாட்டு போட்டி அவகாசம் நீட்டிப்பு

விளையாட்டு போட்டி அவகாசம் நீட்டிப்பு

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு ஜூலை 14 முதல் https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யப்படுகிறது. இதுவரை 10 லட்சம் போட்டியாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். கடைசி நாள் ஆக.16 என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற வரவேற்பை தொடர்ந்து அனைத்து தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க முன்பதிவு கால அவகாசம் ஆக.20 இரவு 8:00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்களாகவோ, பள்ளி, கல்லுாரி மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை காலை 10:00 - மாலை 5:00 மணி வரை 95140 00777ல் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை