விளையாட்டு போட்டிகள்
திருநகர்: திருநகர் பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், இளைஞரணி சார்பில் பொங்கல் விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து பரிசுகள் வழங்கினார். கவுன்சிலர் இந்திரா காந்தி, வழக்கறிஞர் மகாராஜன் கலந்து கொண்டனர். இளைஞர் அணி ஸ்ரீராம், சிவகணபதி, கிருஷ்ணன், விக்கி, விஷ்ணு, கார்த்தி ஏற்பாடுகள் செய்தனர். கோலப்போட்டி, பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், வினாடி வினா உட்பட பல்வேறு போட்டிகளில் ஏராளமான குழந்தைகள், பெண்கள் பங்கேற்று பரிசுகள் பெற்றனர்.