உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்

 எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓடும் தொழிலாளர் பிரிவு கோட்டச் செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். எஸ்.ஆர்.எம்.யூ., கோட்டச் செயலாளர் ரபீக், உதவிக் கோட்டச் செயலாளர் ராம்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ரயில்வே வாரிய உத்தரவுப்படி மருத்துவத் தகுதி இழக்கும் ஓடும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் கிரேடு நிலையிலேயே வேறு துறையில் உள்ள காலி இடங்களில் பணி ஒதுக்க வேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிற மாநில ஓடும் தொழிலாளர்களின் பணியிட மாறுதலை காலதாமதமின்றி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை