உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓடையில் தேங்கிய நீரால் சுகாதாரக்கேடு

ஓடையில் தேங்கிய நீரால் சுகாதாரக்கேடு

பேரையூர் : பேரையூர் அய்யர் ஓடையில் மழை நீரும் கழிவு நீரும் தேங்கி செல்ல வழி இல்லாததால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை இந்த ஓடை வழியாக பேரையூர் கண்மாய்க்கு செல்லும். இந்த ஓடை ஊரின் நடுவே இருப்பதால் இதில் சாக்கடையும் கலக்கிறது. ஓடையை துார் வாராமல் இருப்பதால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கின்றன. இந்த ஓடையில் இருபுறமும் வீடுகள் இருப்பதால் வீட்டின் கழிவுநீரும் ஓடையில் கலக்கிறது.பல நாட்களாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதில் சீமை கருவேல மரங்கள் புதர் போல் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் வீடுகளுக்கு 'விசிட்' வருவது வழக்கம் ஆகிவிட்டது. சுகாதாரக் கேடு ஏற்பட்டு பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரூராட்சியினர் கண்டு கொள்ளவில்லை. மாவட்டநிர்வாகம் ஓடையை துார்வாரி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி