பள்ளி முன் தேங்கும் நீர்
பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் மாணிக்கம்பட்டி நடுநிலைப்பள்ளி முன் தேங்கும் மழை நீரால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.இப்பள்ளி நுழைவாயில் பகுதி சாலை இடையே குளம்போல் மழை நீர் மண் சேர்ந்து சகதியாக மாறி உள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சேற்றில் மாணவர்கள் விழுந்து காயமடைகின்றனர். வகுப்பறைக்குள்ளும் ஈரம், சகதியாகி விடுகிறது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க மாணவர்கள் வலியுறுத்தினர்.