உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில தடகளம் துவக்கம்

மாநில தடகளம் துவக்கம்

மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் நேற்று துவங்கியது. அமைச்சர் மூர்த்தி போட்டிகளை துவக்கி வைத்தார். கலெக்டர் பிரவீன்குமார், மேயர் இந்திராணி, கூடுதல் எஸ்.பி. திருமலைகுமார் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு இடையிலான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் சென்னை மாணவர் உதயசந்திரன் முதலிடம், சிவகங்கை மாணவர் வத்தின் இரண்டாமிடம், துாத்துக்குடி சிதம்பர ராஜா மூன்றாமிடம் பெற்றனர். மாணவிகள் பிரிவில் சென்னை மாணவி தன்சிகா முதலிடம், மயிலாடுதுறை மாணவி சரஸ்வதி இரண்டாமிடம், விருதுநகர் மாணவி கவுசிகா மூன்றாமிடம் பெற்றனர். அமைச்சர் மூர்த்தி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், விடுதி மேலாளர் முருகன் ஏற்பாடுகளை செய்தனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை