உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாநில நுகர்வோர் பாதுகாப்பு கருத்தரங்கு

 மாநில நுகர்வோர் பாதுகாப்பு கருத்தரங்கு

வாடிப்பட்டி: பரவை மங்கையர்கரசி மகளிர் கல்லுாரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் உணவு மற்றும் தமிழக அரசு நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 'உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு' மாநில கருத்தரங்கு நடந்தது. கல்லுாரித் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். கல்வி புலத்தலைவர் செந்துார் பிரியதர்ஷினி, முதல்வர் உமா பாஸ்கர் முன்னிலை வகித்தனர். சார்பு தலைவர் சரவண பிரதீப் குமார் மருத்துவ பொருட்களை வாங்கும்போது அதில் வாசகங்களை படித்து வாங்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த பொருட்களையும் வாங்க கூடாது என வலியுறுத்தினார். துணைத் தலைவர் சக்தி பிரனேஷ், இணைத் தலைவர் திவ்யா மீனு பிரீத்தா, மாவட்ட வழங்கல் அதிகாரி முத்து முருகேச பாண்டியன், தாசில்தார் கோபி, உதவி ஆணையர் விஜய திலகம், உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார் பேசினர். ஆந்திர வாழ்க்கை திறன் பயிற்சியாளர் கிருஷ்ணமோகன் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. பேராசிரியர்கள் ஜெகதீஸ்வரி, ஆர்த்தி ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !