உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி

மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி

மதுரை: தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் அமெச்சூர் சங்கம் சார்பில் சென்னையில் மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணி துவக்கி வைத்தார். இதில் மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. ரோட்டரி பள்ளி ஜெய் விவேகன் தங்கம், ரிஸ்விதா வெள்ளி வென்றனர். விகாசா பள்ளி அக் ஷரா தங்கம், ஜோதி பள்ளி ஹரி உமேஷ் தங்கம், டில்லி பப்ளிக் பள்ளி தர்ஷிகா தங்கம், சமித்ரா வெள்ளி வென்றனர். சஞ்ஜீவ் ஆர்யா, தியாஷ் கார்த்திக், மகாலட்சுமி தங்கம் வென்றனர். மதுரை பப்ளிக் பள்ளி வருண் வெள்ளி, மகாத்மா பள்ளி தக் ஷிண மீனா தங்கம், ஷைன் பள்ளி லக் ஷித் தங்கம், டி.ஏ.ஏ.சி., பள்ளி அபிமன்யு தங்கம் வென்றனர். சங்கச் செயலாளர் சுகுமாரன் பரிசு வழங்கினார். பயிற்சியாளர்கள் கருணாகரன், ரோஹித் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை