உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஸ்டேஷன் சீரமைப்பு பணி 2026 மார்ச்சில் முடியும்

ஸ்டேஷன் சீரமைப்பு பணி 2026 மார்ச்சில் முடியும்

மதுரை: ரயில்வே சார்பில் அக்., 2 முதல் 31 வரை துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக, மதுரை ஸ்டேஷனில் 'அம்ரித் சம்வாத்' எனும் பயணிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கூடுதல் கோட்ட மேலாளர் எல்.என்.ராவ் தலைமை வகித்து ஸ்டேஷனில் உள்ள வசதிகள், பயண அனுபவங்கள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார். பயணிகள் தரப்பில், ''ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை 6 ஆக அதிகரிக்க வேண்டும். பார்க்கிங், கழிப்பறைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சோதனை நடத்த வேண்டும். ஸ்டேஷன் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, பயணிகள் குறுகிய காலம் தங்கும் வகையிலான 'டார்மட்டோரி' வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்'' என வலியுறுத்தினர். ''தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சீரமைப்பு பணி அடுத்தாண்டு மார்ச்சில் முடிவடையும்'' என ராவ் தெரிவித்தார். தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன், கோட்ட சுற்றுச்சூழல், துாய்மை மேலாண்மை மேலாளர் குண்டேவர் பாதல், உதவி வணிக மேலாளர் மணிவண்ணன், உதவி சுகாதார அலுவலர் சுரேஷ், ஸ்டேஷன் மேலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !