புள்ளியியல் தின கொண்டாட்டம்
மதுரை : மதுரையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் மதுரை மண்டலம் சார்பில் புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டது.பொருளாதார திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறையில் பேராசிரியர் மஹாலனோபிஸின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவரது பிறந்த நாள் புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது.மதுரைக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் விஷ்ணு ராஜ் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் பழனியப்பன் வரவேற்றார்.திண்டுக்கல் காந்தி கிராமத்தின் மக்கள் தொகை ஆய்வு மையத் தலைவர் கவிதா, 'இந்திய பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு' எனும் தலைப்பில் புள்ளிவிவரங்களுடன் விளக்கிப் பேசினார்.மாநில பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் மண்டல இணை இயக்குநர் துரைராஜ், கல்லுாரி புள்ளியியல் துறை பேராசிரியர்கள் வெற்றி செல்வி, ராபர்ட், மூத்த புள்ளியியல் அலுவலர் பத்மாவதி, இளநிலை புள்ளியியல் அலுவலர்கள், துணை மண்டலங்களின் உதவி இயக்குநர்கள், பொறுப்பாளர்கள், கணக்கெடுப்பாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.