மேலும் செய்திகள்
விநாயகர் சிலைகள் தயாரிப்புபணிகள் தீவிரம்
27-Jul-2026
திருப்பரங்குன்றம்: ''களிமண் விநாயகர் சிலைகளை கைகளால் தயாரிப்பவர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்'' என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சீசனுக்கு ஏற்றார் போல் களிமண், காகிதக் கூழ், சிமென்ட்மூலம், சுவாமி சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிதுஸ்மஸ் குடில்கள் தயாரிக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்திக்காக 2 இஞ்ச் முதல் 8 அடி உயரமுள்ள பல்வேறு வடிவங்களில் களிமண் விநாயகர் சிலைகள் அச்சுகள் இன்றி கைகளால் தயாரிக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் தயாரிக்கும் காலங்களில் மழை பெய்கிறது. அதனால் சிலைகள் தயாரிப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. களிமண் விநாயகர் சிலைகள் இயந்திரங்கள், அச்சுக்கள் இன்றி கைகளால் தயாரிக்கப்படுவதால், காலதாமதமும் ஏற்படுகிறது. விநாயகர் சிலைகள் தயாரிக்கும் போது அதிகளவில் மழை பெய்து விட்டால் சிலைகள் தயாரிக்க முடியாது. இதனால் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக சிலைகளை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் ஏற்பட்டு நஷ்டம் அடைகிறோம். தமிழக அரசு மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்குவது போல் கைகளால் களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என விநாயகர் சிலைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
27-Jul-2026