மாணவி சாதனை
பேரையூர்: பேரையூர் ஐயப்பன் -நந்தினி தம்பதியின் மகள் ஹர்ஷிதாஸ்ரீ 6. தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கிறார். இவர் 'பிரைன் அபாகஸ்' தேர்வில் உலக சாதனை படைத்துள்ளார். ப்ரைனோ பிரைன் நிறுவனம் சார்பில் மதுரையில் நடந்த போட்டியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் ஹர்ஷிதாஸ்ரீ தங்கப்பதக்கம் வென்றார். தேசிய அளவில் சென்னையில் நடந்த போட்டியிலும் தங்கம் வென்ற ஹர்ஷிதாஸ்ரீ, உலக அளவில் துபாயில் நடந்த போட்டியிலும் பங்கேற்றார். இப்போட்டியில் இந்தியா சார்பாக 10 பேர் பங்கேற்றனர். இப்போட்டியிலும் ஹர்ஷிதாஸ்ரீ வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். மாணவி ஹர்ஷிதாஸ்ரீயை ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.