மாணவருக்கு கல்வி உதவி
மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கும் தந்தையை இழந்த மாணவர், கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்தார். இதனால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட முடிவு செய்து உணவு டெலிவரி வேலைக்கு சென்றார். இதை அறிந்த ரோட்டரி கிளப் ஆப் மதுரை தமிழ்ச் சங்கம் தலைவர் பாலகுரு, செயலாளர் பிரேம் ஆகியோர் சங்க உறுப்பினர்கள் உதவியுடன் மாணவரின் கல்லுாரி கட்டணம் முழுவதையும் செலுத்தி படிப்பை தொடர உதவி செய்தனர். தற்போது அம்மாணவர் படித்துக்கொண்டே மாலை நேரத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியையும் செய்து வருகிறார். ஏழ்மை நிலையில் படிப்பை தொடர உதவி செய்த ரோட்டரி சங்கத்தினருக்கு சக மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.