மாணவி தற்கொலை
மதுரை: கோசாகுளத்தை சேர்ந்த வேன் டிரைவர் கார்த்திக். இவரது மகள் பேபி ஐஸ்வர்யா. பிளஸ் 1 படித்தார். அவர் அலைபேசியை அதிகம் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்து பெற்றோர் கண்டித்துள்ளனர். மனமுடைந்த அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.