மாணவர்கள் 3800 கி.மீ., சைக்கிள் பயணம்
திருமங்கலம்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக காஷ்மீர் டூ கன்னியாகுமரிக்கு 3800 கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொண்ட மும்பை மாணவர்கள் திருமங்கலம் வந்தனர். பிளாஸ்டிக் பயன்பாடு, அதிக வாகன போக்குவரத்தால் வெப்பமயமாதல், காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை எச்.எஸ்.என்.சி., பல்கலையின் 3 மாணவிகள் உட்பட 15 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். காஷ்மீரில் டூ கன்னியாகுமரி வரை 3800 கி.மீ., விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்கின்றனர். நேற்று திருமங்கலத்தை கடந்து சென்றனர். அவர்கள் கூறுகையில், ''கடந்த டிச. 31ல் காஷ்மீரில் பயணத்தை துவக்கினோம். ஜன.22ல் கன்னியாகுமரி செல்ல உள்ளோம். பேராசிரியர்கள், பயிற்சியாளர்கள் உடன் வருகின்றனர்'' என்றனர்.