மலையில் மாணவியர் ஆய்வு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வரலாற்று துறை மாணவியர் கரடிகல் பெருமாள் மலையில் ஆய்வு மேற்கொண்டனர்.துறைத் தலைவர் பிறையா, பேராசிரியர்கள் சிந்து, ராஜகோபால், ஆத்மநாதன் ஆகியோர் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் பெருமாள் மலைக்கு சென்று முக்கோண ஆணித்தலை மற்றும் இரண்டு உடை அணிந்த கால்கள், 4000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்களை ரசித்தனர். ஓவிய பாறையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மனிதர்கள் வசிக்காத கரடு முரடான பாறைகளால் மறைக்கப்பட்ட அடர்ந்த புதர் பகுதியில் உள்ள இரண்டு புதிய கற்கால குகைகள், திகம்பர சமண சமய சிற்பம், சமண மத துறவிகளின் படுக்கைகள், தமிழி எழுத்துக்கள், இயற்கையாக அமைந்த நீர் சுனை ஆகியவற்றை ஆய்வு செய்து பிராமி கல்வெட்டை வாசித்து அறிந்தனர்.