மாணவர்கள் சிலம்ப சாதனை
மதுரை: மதுரையில் கின்னஸ் ஒன்ஸ் ஸ்டார் உலக சாதனை சிலம்பப்போட்டி நடந்தது. இதில் தி சாய் சிலம்ப பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒற்றைக்கம்பு பிரிவில் திவ்யதர்ஷினி, சர்வேஷ், ஹர்ஷிகா, இரட்டைக் கம்பு பிரிவில் ஜனதன், பால வெங்கடேஷ் ஆகியோர் ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தனர். தலைமை பயிற்சியாளர் சாய் சுதாகர் பாராட்டினார்.