நீர்நிலைகளை மேம்படுத்த ஆய்வு
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே யு.வாடிப்பட்டி மலட்டாறு தடுப்பணை, அசுவமாநதி தடுப்பணை பகுதிகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள், பா.பி., கட்சியினர் நீர்வளத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.நேற்று குண்டாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் நிறைமதி, உதவி பொறியாளர்கள் பாண்டியன், ஏங்கெல்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், செல்லம்பட்டி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் காசிமாயன், விவசாயிகள் தடுப்பணைகளை பார்வையிட்டனர்.மலட்டாறு தடுப்பணை பகுதியில் மழைப்பொழிவின்றி வறண்டு கிடந்தது. இப்பகுதிக்கு 58 கிராம கால்வாய் இணைப்பு கொடுக்க முடியுமா என்றும், மழைநீர் தேங்கினால் நிலத்தடியில் உறிஞ்சப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.நிரம்பிய நிலையில் உள்ள அசுவமாநதி தடுப்பணையில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.