உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மானிய விலையில் விதைகள்

மானிய விலையில் விதைகள்

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வளர்மதி தெரிவித்துள்ளதாவது: கொட்டாம்பட்டி, தும்பைபட்டி வேளாண் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் கோ 55, ஏடிடி 54, பாரம்பரிய நெல் விதைகளான துாயமல்லி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட நெல் விதைகள் மானிய விலையில் விற்கப்படுகின்றன. உரம் மற்றும் பூச்சிக்கொல்லி உரச் செலவை குறைத்து மண்வளத்தை காக்க திரவ உயிர் உரங்கள் மற்றும் உயிரியியல் பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனஸ் மற்றும் மெட்டடாரைசியமும், உளுந்தில் வம்பன் 9, ரக விதைகள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மையங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !