உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நடந்தது. கல்லுாரியில் இருந்து டீன் அருள் சுந்தரேஷ் குமார் தொடங்கி வைத்த பேரணி அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் மனநல மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் லாய்ட்ஸ் வரவேற்றார். துறைத் தலைவர் ஜான் சேவியர் சுகதேவ் தலைமை வகித்தார். பேராசிரியர் கீதாஞ்சலி தலைமையில் மருத்துவ, நர்சிங் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். ஓவியம், புகைப்படம், விழிப்புணர்வு செயல்பாட்டு சவால் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினர். உதவிப் பேராசிரியர் அருண் பிரசன்னா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்