உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோழவந்தானில் சூரசம்ஹாரம்

சோழவந்தானில் சூரசம்ஹாரம்

சோழவந்தான்: சோழவந்தான் வட்டார கோயில்களில் சூரசம்ஹாரம் விமரிசையாக நடந்தது. திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் விநாயகர், ஏலவார்குழலி அம்மன், முருகன் நான்கு ரத வீதிகளில் பவனி வந்தனர். கோயில் முன் அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து முருகன் சூரபத்மனை வதம் செய்தார். வேலுக்கு மரியாதை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பரசுராம், கணேசன் பூஜைகள் செய்தனர். விழா கமிட்டியினர் பொன் கார்த்திக், சண்முகவள்ளி, மாதேஷ், கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புறப்பாடு நடந்தது. பக்தர்களின் 'அரோகரா' கோஷத்துடன் அசுரர்கள் ஒவ்வொருவரையும் முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. பின் சுவாமிக்கு பலவகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கந்தசஷ்டி விழா கமிட்டியினர். கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். கண்ணன் பட்டர், அர்ச்சகர் செந்தில் பூஜைகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !