உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டேக்வாண்டோ போட்டி

டேக்வாண்டோ போட்டி

மதுரை : மதுரை சுந்தர்ராஜன்பட்டி அம்பிகை நாராயணன் விளையாட்டு வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது. ரைசிங் சாம்பியன்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்றனர்.14 வயதுக்குட்பட்ட 24 முதல் 26 கிலோ எடை பிரிவில், அழகர்கோவில் சுந்தரராஜா பள்ளி மாணவி நந்திதா வெள்ளியும், 29 முதல் 32 கிலோ எடை பிரிவில் ஜீவிதா வெண்கலமும் வென்றனர். 32 முதல் 35 கிலோ எடை பிரிவில் உத்தங்குடி அரசுப் பள்ளி மாணவி ஜீவிதா வெண்கலமும், 21 முதல் 23 கிலோ எடை பிரிவில் மகாத்மா பள்ளி மாணவர் ரித்திக்கேஸ்வர் வெள்ளியும் வென்றனர்.17 வயதுக்குட்பட்ட 48 முதல் 51 கிலோ எடை பிரிவில் டான் பாஸ்கோ பள்ளி மாணவர் விஷ்ணு வெள்ளி வென்றார். அவர்களை வளாகத் தலைவர்கள் சுந்தரகண்ணன், சரவணன், பயிற்சியாளர் கவுரி சங்கர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ