மேலும் செய்திகள்
ரூ.70 ஆயிரம் லஞ்சம்: மதுரையில் தாசில்தார் கைது
09-Sep-2025
மதுரை:'கிரஷர் யூனிட்' அமைக்க அனுமதி வழங்க, 70,000 ரூபாய் லஞ்சம் கேட்ட மதுரை தெற்கு தாசில்தார், அவரது டிரைவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், தெற்கு தாலுகா சின்ன உடைப்பை சேர்ந்தவர் ரத்தினம். இவர், கொசவபட்டியில் கிரஷர் யூனிட் அமைக்க, தெற்கு தாலுகாவில் விண்ணப்பித்தார். வி.ஏ.ஓ., முதல் தாசில்தார் வரை இடத்தை ஆய்வு செய்தனர். அனுமதி வழங்க, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, தாசில்தார் ராஜபாண்டியன் கேட்டார். அதன் பின், தாலுகா அலுவலகத்திற்கு ரத்தினம் அலைந்து திரிந்தார். அவர்களுக்குள் பேச்சு நடந்தது. பேரம் பேசியதில், 70,000 ரூபாய் கொடுத்தால் போதும் என, தாசில்தார் தெரிவித்துள்ளார். மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ரத்தினம் புகார் தெரிவித்தார். நேற்று மாலை தெற்கு தாலுகா அலுவலகம் வந்த ரத்தினத்திடம், தன் டிரைவர் ராம்கே, 32, என்பவரிடம், லஞ்ச பணத்தை கொடுக்கும்படி தாசில்தார் கூறினார். தாசில்தார் ஜீப் அருகே லஞ்ச பணத்தை ராம்கே பெற்றபோது, ஏ.டி.எஸ்.பி., சத்யசீலன் தலைமையிலான போலீசார் அவரையும், தாசில்தார் ராஜபாண்டியனையும் கைது செய்தனர்.
09-Sep-2025