தைப்பூச விழா: கலெக்டர் ஆய்வு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் இன்று தைப்பூச திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார்.திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்திலுள்ளபழனி ஆண்டவர் கோயிலில் இன்று (பிப்.11) தைப்பூச திருவிழா நடக்கிறது. அதனை முன்னிட்டு கலெக்டர் சங்கீதா நேற்று திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை, மலை மேல் செல்லும் புதிய படிக்கட்டுகள், பழைய மலை படிக்கட்டுகள், சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி கமிஷனர்சித்ரா, அறநிலை துறை இணை கமிஷனர் செல்லத்துரை, துணை கமிஷனர் சூரிய நாராயணன், போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி, இன்ஸ்பெக்டர் மதுரைவீரன், ஆர்.டி.ஒ., ராஜகுருவிடம் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர்கேட்டறிந்தார்.பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், போதிய அடிப்படைகள் வசதிகள் செய்து கொடுக்கவும், திருவிழா பணியில் ஈடுபடும் அனைத்து துறை பணியாளர்களும் கோயில் நடை திறப்பது முதல் நடை சாத்தும் வரை பணியில் இருக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.