புதுப்பொலிவுடன் தமிழ்நாடு ஓட்டல்
மதுரை: மதுரை அழகர்கோவில் ரோடு தமிழ்நாடு ஓட்டலில், நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.7 கோடி மதிப்பில் உருவான புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக துவங்கி வைத்தார். சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு, பயணிகள் தங்குவதற்கு மட்டுமின்றி திருமணம், கருத்தரங்குகள், விழாக்கள் நடத்தும் வசதியுடன் செயல்படுகிறது. இங்கு தங்கும் வசதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் அறைகள், 'இயல்', 'இசை' கூடங்கள், 400 பேர் அமரும் வகையில் 'நாடகம்' எனும் திருமண அரங்கு, 'முத்தமிழ்' எனும் குளிர்சாதன வசதியுடன் கூட்ட அரங்கு, நாட்டியம் எனும் திறந்தவெளி அரங்கு குறைந்த வாடகைக்கு வழங்குகின்றனர். 'அமுதகம்' எனும் உணவகம் காலை 6:00 முதல் இரவு 9:30 மணி வரை செயல்படுகிறது. இங்கு தென்மாநில, வடஇந்திய, தந்துாரி, சைனீஸ் வகை உணவுகள் நிறமூட்டிகள் சேர்க்காமல் விற்பனை செய்கினறனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரவீன்குமார், மேயர் இந்திராணி பங்கேற்றனர்.